அமைதி, அமராவதிகளின் வானொலி தன் முதல் அலைவரிசை ஒலிபரப்பைத் தொடங்குகிறது. நேயர்களுக்கு வணக்கம். நூல் வெளியீட்டு விழாவில் வாசகர்களுக்கு வணக்கம் சொல்வதுதான் மரபு. மாறாக இங்கு நான் நேயர்களுக்கு வணக்கம் சொல்ல காரணம், இங்கு வெளியீடு காண்பது அமராவதிகளின் வானொலி. Silence, The court is in session விஜய் டெண்டுல்கர் எழுதிய பிரபல நாடகம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் அமைதி எனும் சிற்றிதழில் வெளிவந்தவை. இந்த இதழை நடத்தியவர் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் உன்னதன் அவர்கள். ஆகவேதான் அமைதி, அமராவதிகளின் வானொலி தன் ஒலிப்பரப்பைத் தொடங்குகிறது என்று தொடங்கினேன். செங்காந்தள் சோழன் எனும் பதிப்பகம் வழியே இந்நூல் வெளிவந்திருக்கிறது. வந்திருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் வடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதே சரியாக இருக்கும். மலர்களில் செங்காந்தள் மலருக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. புதுக்கோட்டை எழுத்தாளர்களின் நூல்களை இப்பதிப்பகம் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு சோலச்சியின் ஆப்பையால் ஒரு அடி, சின்னக் கனகு வின் தப்புத் தப்பாய் நூல்கள் வெளிவந்தன. இந்த வரிசையில் கவிஞர் உன்னதன் அவர்களின் அ...
இடுகைகள்
கலை இலக்கிய இரவு உரை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அனைவருக்கும் வணக்கம் என்று சொல்லி உரையைத் தொடங்குவதே பேச்சுக்கலையின் இலக்கண மரபு. ஆனால் இதற்கு மாறாக நான் I LOVE YOU என்று சொல்லி தொடங்குகிறேன். இப்படியாகத் தொடங்கினால்தான் காரைக்குடி சாதிக் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு கூல் கேப்டன் பிஸ்மி எனும் நூல் அர்த்தம் பெறும். தமுஎகச காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா கலை இலக்கிய இரவில் எனது முதல் சிறுகதை நூல் வெளியீடு காண்கிறது. நீங்கள் வந்து இந்த நூலை அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென நண்பர் சாதிக் கேட்டுக்கொண்டார். கலை இரவிலா என்று தயங்கிய நான் எத்தனை மணியாகுமென்று கேட்டேன். ஏழரை மணியாகும் என்றார். அவர் சொன்ன நேரம் என்னை பெரிதும் யோசிக்க வைத்தது. எட்டுக்குள் முடிந்து விடுமென உத்திரவாதம் அளித்தார். மணி ஏழரை கடந்து எட்டரை, ஒன்பது , பத்து என்று கடந்து நூல் வெளியிடுகையில் பன்னிரண்டரை ஆகிவிட்டது. இவ்வளவு நேரத்திற்கு எனக்கு கோபம் வந்திருக்க வேண்டும். என்னையும் அறியாமல் விரக்தி வந்திருக்க வேண்டும். எதுவும் எனக்குள் நிகழவில்லை. இருக்கையில் பொறுமையாக அமர்ந்திருந்தேன். ஒருவர் என் காலை பலம் கொண்ட மட்டும் மிதித்து துவைத...
இளையோர் எழுச்சி தினம் உரை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கரம்பை மண்ணில் குடி கொண்டுள்ள கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்களே, தமிழ்த்துறை தலைவரும் இணைப் பேராசியருமான செங்கொடி நாவல் கண்ட அம்மா ந. சுலோச்சனா அவர்களே, தமிழ்த்துறை பேராசியர்கள் பெருமக்களே, மாணவச் செல்வங்களே, குழந்தைகளே அனைவருக்கும் வணக்கம். நீங்கள் நினைப்பீர்கள், இது கல்லூரி விழா. இந்த அரங்கில் கூடியிருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள், எழுச்சி தீபங்கள், அக்னிச் சிறகுகள். குழந்தைகள் இல்லாத இந்த அரங்கில் குழந்தைகளுக்கு வணக்கம் சொல்கிறாரே ஏன் என்று கேட்பீர்கள். பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மாணவர்கள் முன்பு உரையாற்றுகையில் அவர்களே, அவர்களே , அவர்களே என்று அழைத்துவந்து நண்பர்களே, குழந்தைகளே உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று சொல்லி உரையைத் தொடங்குவார். நீங்கள் எழுச்சி இளைஞர்கள்தான், குன்று குமரர்கள்தான், வாலிப நெஞ்சங்கள்தான். ஆனால் பாரத தாய்க்கு நீங்கள் மட்டுமல்ல, நாம் எல்லாரும் குழந்தைகள்! எனக்கு முன்பு தலைமை உரையாற்றிய கல்லூரி முதல்வர் அவர்கள் அறிவியல் தமிழில் மிகச் சிறப்பான உரையை தந்தார்....
உயிர்ச்சுருட்டி நாவல் மீதான எனது பார்வை உரை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அனைவருக்கும் வணக்கம், நேரம் மாலை ஆறரை மணி. ஆண்கள் உலகம் போதை மயக்கத்திற்குள் சுருள்கின்ற நேரம். இந்நேரத்தில் போதைப் பொருளைப் பேசும் பொருளாகக் கொண்ட ஒரு நாவல் குறித்து எனது பார்வையை உங்களோடு பரிமாற இருக்கிறேன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தஞ்சாவூர் மாநகர் கிளை ஒருங்கிணைக்கின்ற ஆறாவது அமர்வில் எனக்கு இந்த வாய்ப்பு நல்கியமைக்காக நன்றி நவில்வதை விடவும் இந்த அமர்வில் எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை அவர்களின் முதல் நாவலான உயிர்ச்சுருட்டியைத் தேர்வு செய்தமைக்காக நன்றி பாராட்டுகிறேன். இந்நேரத்தில் எனது சமீபத்திய பந்தம் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது பேரன்புகள். நிகழ்வை புகையிலை காம்பு போல ஒரு விதமான கிறக்கத்தோடு நெறியாள்கை செய்யும் கன்னட மொழிபெயர்ப்பாளர் சகோதரர் செ.பிரபாகரர் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்புகள். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் உயிர்ச்சுருட்டி நாவலைப் பேசுகிறோம். இந்த நாவல் குறித்து பேசுகின்ற இந்நேரத்தில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் இன்று புகையிலை கன்றை நடவு நட்டு மிதமாக தண்ணீர்...