இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ பயிற்சி பட்டறை - தொடக்கவுரை

படம்
  அனைவருக்கும் வணக்கம், அமுதபாரதி எனும் கவிஞர் இப்படித்தான் காட்டைப் பார்த்தார். மூங்கில் காடு. மூங்கில் காட்டில் நாமாக இருந்தால் விறகு தேடுவோம்,  சுள்ளி தேடுவோம்,  பிரம்பு தேடுவோம். அவர் வேறொன்றை தேடினார். இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? கவிஞர் அமுதபாரதி காட்டைப் பார்த்ததைப் போலதான் நான் உங்களைப் பார்க்கிறேன். எனக்கு ஒரு பகுதி மாணவர்கள் பூக்களாக தெரிகிறீர்கள். மறுபகுதி மாணவர்கள் பறவைகளாக தெரிகிறீர்கள்.  நான்.உங்களுக்குள் தேடுகிறேன். இந்த பறவைகள் கூட்டத்தில் எந்த பறவை குயில் இதையே இன்னும் வேறொரு விதமாக பார்க்கிறேன். இந்த பறவைகள் கூட்டத்தில் எந்த குயில் ஹைக்கூ இப்படி பார்ப்பதைக் கொண்டு கண்களுக்குத் தெரிவதைக் கொண்டு நமது எண்ணத்தை விவரிப்பதுதான் ஹைக்கூ. நம் எல்லாருக்குள்ளும் கவிதை உணர்வு இருக்கிறது. அந்த உணர்வைத் தேடி கண்டுபிடித்து வெளிக்கொணரும் முகமாக வரலாற்று சிறப்புமிக்க ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரி கலை அருவி இலக்கிய தமிழ்ப்பேரவையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து மூன்று நாள் ஹைக்கூ பயிற்சி பட்டறையை நடத்துகிறது. ஹைக்கூ வடிவம் நம் மொழிக்கு புதித...

கரம்பைத் தமிழ்ச்சங்கம் இலக்கிய உரை

படம்
  அனைவருக்கும் வணக்கம், இவ்வளவு நேரம் போதையில் இருந்து இப்பொழுது தெளிந்துள்ளேன்.  இன்று ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினம் வேறு. கடைகள் இருக்காதே.  இவருக்கு போதை எப்படி வந்தது என்று நினைப்பீர்கள். கேட்பீர்கள். இது பத்து நாளைய போதை. நண்பர் கவிஞர் ஞானவடிவேல் அவர்கள் பத்து நாட்களுக்கு முன்பு என்னிடம் தொடர்புகொண்டு கரம்பை தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் உரையாற்ற வேண்டுமே, இந்த மாதத்து சங்க நிகழ்வுக்கு வரவேண்டுமே என்று கேட்டுக்கொண்டார். இப்பொழுது எனக்குள் ஏறிய போதை. கரம்பக்குடி என்னை வளர்த்த ஊர். என் உடம்பில் ஓடும் இரத்தத்தின் இரத்த அணுக்கள் கரம்பக்குடியின் மண்ணும் நீரும்  தந்தது. ஒவ்வொரு படைப்பாளனும் கலைஞனும் கவிஞனும் மூன்று வலைகளுக்குள் பின்னப்பட்டிருப்பான். பிணைப்பு, போதை, மயக்கம். நான் கரம்பக்குடி எனும் ஊரோடும் இலக்கியத்தோடும் பிணைப்பு கொண்டவன். வாசிப்பதிலும் எழுதுவதிலும் இலக்கிய உரையாற்றுவதிலும் போதை கொண்டவன்.  புதிதாக தேடுவதிலும் ஆய்வு செய்வதிலும் மயக்கம் கொண்டவன். என் வாழ்வோடு பிணைப்பு கொண்ட கரம்பைக்குடி தமிழ்ச் சங்கத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்...