இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தப்புத் தப்பாய்

படம்
  அனைவருக்கும் வணக்கம், புதுக்கோட்டையில் எத்தனையோ விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சரியான நேரத்தில் தொடங்கும் விழாவாக,  திட்டமிட்ட விழாவாக,  அழகு விழாவாக,,, ஒரு விழா தப்பு தப்பாய்  கொண்டாடப்படுகிறது இப்பொழுதுதான்.  தப்பு தப்பாய் கொண்டாடுகிறோமே தவிர தப்பும் தவறுமாய் கொண்டாடவில்லை.  தப்பு என்பதற்கு பல பொருள் இருக்கின்றன. தப்பு என்பது தவறைக் குறிக்கும்.  தப்பு என்பது பறையைக் குறிக்கும்.தப்பித்தல் என்பது தப்பாகும்.  இதுநாள் வரை இல்லாது புதியாய் செய்வது தப்பாகப் பார்க்கப்படும். இந்த விழா தப்பு தப்பாய் நடைபெறுகிறது என்றால் புத்தம் புதிதாய் நடைபெறுகிறது என்பதாகப் பார்க்கிறேன். அட்டைப்படம் சமூக வளைதளங்களில் பகிரப்படும்பொழுது பார்த்தேன். தப்பு தப்பாய் என்று இருந்தது. தப்பு தப்பு இடையில் த் எனும் சந்தி வருமா , வராதா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. பிறகு இந்தக் கேள்வியே எனக்குத் தப்பாகத் தோன்றியது. அடுக்குத் தொடரில் இரண்டு சொற்களைக்கு இடையில் சந்தி வராது. அந்த இரு சொற்களையும் சேர்த்தால் சந்தி வரும். ஆயினும் தப்பு தப்பாய் இடையில் த் சேர்த்து வாசித்தேன். அ...